பிற விளையாட்டு

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி + "||" + A Division Volleyball League: Customs win in opening match

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி
‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 29-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஐ.ஓ.பி., எஸ்.ஆர்.எம்., வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், ஐ.சி.எப்., இந்தியன் வங்கி உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை வருமான வரி கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். வருமானவரித்துறை அதிகாரிகள் திவாஹர், சுரேஷ் பெரியசாமி, ‘ஆச்சி’ குரூப் சேர்மன் பத்மசிங் ஐசக், வழக்கறிஞர் தங்கசிவன், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே. மார்ட்டின் சுதாகர், பொருளாளர் செல்வகணேஷ், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரை பாண்டியன், கைப்பந்து நிர்வாகிகள் கலைசெல்வன், ஆர்.வி.எம்.ஏ.ராஜன், பழனியப்பன், உபைதுர் ரகுமான், கேசவன், முன்னாள் வீரர்கள் தினகரன், ஜெகதீசன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.


பின்னர் நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சுங்க இலாகா அணி 25-23, 25-15. 25-19 என்ற நேர் செட்டில் வருமானவரி அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 17-25, 25-16, 25-17, 25-22 என்ற செட் கணக்கில் பனிமலர் என்ஜினீரியங் கல்லூரியை வீழ்த்தியது.