‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 10 March 2020 12:12 AM GMT (Updated: 10 March 2020 12:12 AM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 30-28, 23-25, 30-28, 25-22 என்ற செட் கணக்கில் ஜெயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணி 25-17, 25-21, 18-25, 25-23 என்ற செட் கணக்கில் சேப்பாக் பிரண்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

Next Story