பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கால்இறுதியில் பி.வி.சிந்து சாய்னா வெளியேற்றம் + "||" + Badminton The Semi-final PV Sindhu Saina Discharge

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கால்இறுதியில் பி.வி.சிந்து சாய்னா வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கால்இறுதியில் பி.வி.சிந்து சாய்னா வெளியேற்றம்
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
பர்மிங்காம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 11-21, 8-21 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தார். தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் சாய்னாவுக்கு இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சங் ஜி ஹயனை (தென்கொரியா) சாய்த்து கால்இறுதியை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனை சந்தித்தார். 45 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் லக்‌ஷயா சென் 17-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.