‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: எஸ்.ஆர்.எம். அணி 3-வது வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: எஸ்.ஆர்.எம். அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 14 March 2020 12:15 AM GMT (Updated: 14 March 2020 12:15 AM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது.

சென்னை,

நேற்று அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 29-27, 25-22, 25-16 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப். அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய எஸ்.ஆர்.எம். அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 19-25, 25-18, 26-24, 14-25, 15-9 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை போராடி வீழ்த்தியது.

இந்த போட்டி இன்று முதல் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். (மாலை 4.30 மணி), இந்தியன் வங்கி-தமிழ்நாடு போலீஸ் (மாலை 6 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story