பிற விளையாட்டு

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைப்பு + "||" + Chennai District A Division Volleyball League

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைப்பு

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைப்பு
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்தது. இந்த போட்டி 3 நாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்து இருப்பதால் இந்த போட்டி அடுத்த மாதத்துக்கு (ஏப்ரல்) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார். இதேபோல் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வந்த சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியும் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் அறிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து லீக் போட்டிகளும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று இணை செயலாளர் கே.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்
பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.