வங்காளதேச ஜூனியர் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் தள்ளிவைப்பு


வங்காளதேச ஜூனியர் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 19 March 2020 12:11 AM GMT (Updated: 19 March 2020 12:11 AM GMT)

வங்காளதேச ஜூனியர் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்காளதேச ஜூனியர் கிரிக்கெட் (16 வயதுக்கு உட்பட்டோர்) அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 3 நாள் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

* ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை எப்.சி. சிட்டி அணி தனது அடுத்த 2 லீக் ஆட்டங்களில் மாலத்தீவை சேர்ந்த டி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும் (ஏப்ரல் 15-ந் தேதி), வங்காளதேசத்தை சேர்ந்த பாசுன்தாரா கிங்ஸ் அணியையும் (ஏப்ரல் 29-ந் தேதி) எதிர்கொள்ள இருந்தது. இந்த இரண்டு ஆட்டங்கள் உள்பட இந்த போட்டி தொடர் முழுமையாக ஏப்ரல் மாதம் இறுதி வரை ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

* ஐஸ் ஆக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி (டிவிசன் 1) சுலோவேனியா மற்றும் போலந்து நாட்டில் ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடக்க இருந்தது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story