கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு


கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 March 2020 12:08 AM GMT (Updated: 21 March 2020 12:08 AM GMT)

அமெரிக்காவில் கூடைப்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் புகழ்பெற்ற என்.பி.ஏ.கூடைப்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடிய 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அந்த வீரர்களை அணியின் டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி கடைசியாக கடந்த 10-ந் தேதி புரூக்ளின் நெட்ஸ் அணியுடன் மோதியது. புரூக்ளின் நெட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கெவின் டுரன்ட் உள்பட 4 வீரர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. அவர்கள் மூலமே இந்த 2 வீரர்களுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Next Story