கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி


கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி
x
தினத்தந்தி 27 March 2020 12:46 AM GMT (Updated: 27 March 2020 12:46 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு இந்த தொகையை தலா ரூ.5 லட்சம் வீதம் பிரித்து அளித்துள்ளார். மேலும் சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். நாம் மிகச்சிறந்த தேசத்தில் உள்ளோம். இந்த சோதனையான காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். விரைவில் கொரோனா தாக்கத்தில் இருந்து மீள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைக்கு செல்ல முடியாமல், ஊதியம் கிடைக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் ஏழை மக்களுக்கு பசியாற்ற அரிசி வாங்குவதற்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story