துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி ரூ.5 லட்சம் நிதியுதவி


துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி ரூ.5 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 3 April 2020 12:26 AM GMT (Updated: 3 April 2020 12:26 AM GMT)

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி சண்டிலா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா தடுப்பு பணிகளுக்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவருமான அபுர்வி சண்டிலா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார். 

இதில் ரூ.3 லட்சத்தை பிரதமரின் அவசரகால நிவாரண நிதிக்கும், ரூ.2 லட்சத்தை ராஜஸ்தான் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கும் அளிக்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் தனது பங்குக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது.

Next Story