பிற விளையாட்டு

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து + "||" + World Cup sniper match in Delhi canceled

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து

டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து
டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் இந்த போட்டி மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி மே 5-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதே போல் பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடக்க இருந்த ஆஸ்திரேலிய ஓபன், தாய்லாந்து ஓபன், இந்தோனேஷிய ஓபன் ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பல ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளும் ரத்தாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு - கொரோனா பரிசோதனை
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
2. டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்
டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் !
இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய தினம், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிரை பதிவு செய்துள்ளது.
4. 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மராட்டிய அரசு
டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா ஆகிய 4 மாநில மக்கள் நுழைவதற்கு மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
5. டெல்லியில் புதிதாக 4,454 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 454- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.