பிற விளையாட்டு

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’ - இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை + "||" + Want to be the first Indian race walking Olympic medallist, says KT Irfan

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’ - இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை

‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’ - இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் நடைப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கும் 30 வயதான கேரளாவைச் சேர்ந்த தடகள வீரர் கே.டி. இர்பான் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-


‘நடைப்பந்தயம் மிகவும் டெக்னிக்கலான போட்டியாகும். இதனை பார்க்க எளிதாக தெரியும். ஆனால் இந்த போட்டி மிகவும் கடினமானதாகும். உங்களது நுணுக்கம் தான் பதக்கம் வெல்ல உதவும். எனது பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நம்பிக்கையான மனநிலையுடன் செல்வேன். கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் உள்ளது. அதை சாதித்து காட்டுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி வரவேற்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார்.
3. ‘ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம்’- டுட்டீ சந்த்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம் என டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.
4. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு: அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு நடைபெறும் முகாமை தவிர மற்ற அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
5. ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா?
ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.