‘சாய்’ மையத்தில் மீண்டும் பயிற்சி: மத்திய மந்திரி அறிவிப்பு


‘சாய்’ மையத்தில் மீண்டும் பயிற்சி: மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 11:15 PM GMT (Updated: 3 May 2020 7:46 PM GMT)

சாய் மையத்தில் மீண்டும் பயிற்சி தொடங்க உள்ளதாக மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையங்களில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்களும், ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தங்களை தயார்படுத்தி வந்த வீரர், வீராங்கனைகளும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் மாதம் பயிற்சி அனைத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக முன்னணி வீரர், வீராங்கனைகள் போதிய பயிற்சி இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் படிப்படியாக தேசிய பயிற்சி முகாமை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்தார். முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் பாட்டியாலாவில் உள்ள சாய் மையங்களில் பயிற்சி தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஒலிம்பிக் வாய்ப்பு இல்லாத மற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம்கள் தொடங்குவதற்கு செப்டம்பர், அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியது இருக்கும். இப்போதைக்கு எந்த போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story