பிற விளையாட்டு

போலீசார் தான் உண்மையான செயல் வீரர்கள் - மேரிகோம் புகழாரம் + "||" + The cops are the real heroes - Marykom fame

போலீசார் தான் உண்மையான செயல் வீரர்கள் - மேரிகோம் புகழாரம்

போலீசார் தான் உண்மையான செயல் வீரர்கள் - மேரிகோம் புகழாரம்
போலீசார் தான் உண்மையான செயல் வீரர்கள் என்று, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் கிட்டத்தட்ட 30 பேர் அடுத்த வாரம் முதல் சமூக இடைவெளியோடு தனித்தனியாக பயிற்சியை தொடங்க இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* ‘மூத்த வீரர் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம்’ என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

* பார்முலா1 கார்பந்தயம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகளாவதையொட்டி இந்த போட்டி வரலாற்றில் யார் செல்வாக்குமிக்க நபர் என்பதை அறிய ஆன்-லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷுமாக்கர் செல்வாக்குமிக்க நபராக தேர்வுசெய்யப்பட்டார்.

* ‘பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 தங்கப்பதக்கம் வென்றவரும், எம்.பி.யுமான மேரிகோம் தனது இளையமகன் பிரின்சின் பிறந்த நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் போலீசாருடன் இணைந்து கொண்டாடினார். போலீசாருக்கு மத்தியில் கேக் வெட்டிய சிறுவன் பிரின்ஸ் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார் தான் உண்மையான செயல் வீரர்கள், அவர்களுக்கு ஒரு சல்யூட்’ என்று மேரிகோம் புகழாரம் சூட்டியுள்ளார்.