பிற விளையாட்டு

அங்கிதா, திவிஜிக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை + "||" + AITA to nominate Ankita Raina, Divij Sharan for Arjuna award

அங்கிதா, திவிஜிக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை

அங்கிதா, திவிஜிக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை
அங்கிதா, திவிஜிக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா, வீரர் திவிஜ் சரண் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. 27 வயதான அங்கிதா ரெய்னா 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றவர். பெட் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளேஆப் சுற்றுக்கு இந்திய அணி முதல் முறையாக தகுதி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார். 34 வயதான திவிஜ் சரண், ஆசிய விளையாட் டில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதே போல் கடந்த ஆண்டு புனேயில் நடந்த மராட்டிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவிலும் மகுடம் சூடினார்.