பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல்


பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல்
x
தினத்தந்தி 24 May 2020 11:23 PM GMT (Updated: 24 May 2020 11:23 PM GMT)

பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லண்டன், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கொரோனா அச்சத்தால் இன்னும் தொடங்கப்படவில்லை. 7 சுற்று தள்ளிவைக்கப்பட்டும், 3 சுற்று ரத்து செய்யப்பட்டும் இருக்கிறது. எஞ்சிய 12 சுற்று போட்டிகளை நடத்த பார்முலா1 கார்பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதில் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் சில்வர்ஸ்டோன் ஓடுகளத்தில் ஜூலை 19-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. ஆனால் இதை ஏற்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக பார்முலா1 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Next Story