பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு: 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு + "||" + Goa National Games set to be postponed

கொரோனா பாதிப்பு: 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு: 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக கோவாவில் நடைபெற இருந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பனாஜி

கோவாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட, மிகவும் தாமதமான 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள்  கொரோனா தொற்றுநோயால்  காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அக்டோபர் 20 முதல் நவம்பர் 4 வரை தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டு கொண்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தொற்றுநோய் காரணமாக தேசிய விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க தேசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது என்று கோவாவின் துணை முதல்வர் மனோகர் (பாபு) அஜ்கோங்கர் அறிவித்துள்ளார். 

செப்டம்பர் இறுதியில் கூட்டத்தை நடத்தி தேசிய விளையாட்டுகளுக்கான தேதிகளை நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யுங்கள். கோவா அரசு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையைப் பெற விளையாட்டுகளை ஒழுங்கமைக்க நான்கு மாதத்திற்கு முன்கூட்டியே அறிவிப்பு தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹூப்ளி அருகே : கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து 10 பெண்கள் உள்பட 11 பேர் பலி
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.