விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள்


விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 May 2020 10:45 PM GMT (Updated: 30 May 2020 10:01 PM GMT)

விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

ஆக்கி இந்தியா அமைப்பின் ஊழியர்கள் 27 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆக்கி இந்தியா அலுவலகம் 14 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், தேசிய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மாநில ஒலிம்பிக் சங்கங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் காலதாமதமின்றி கொரோனா பரிசோதனை செய்ய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பரிசோதனை செய்து கொள்வதால் எங்களுக்கு மட்டுமின்றி வீரர்கள் உள்பட எங்களது பங்குதாரர்கள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்க உதவும்‘ என்று தெரிவித்துள்ளார். நரிந்தர் பத்ராவின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் நரிந்தர் பத்ரா தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story