பிற விளையாட்டு

கேல்ரத்னா விருதுக்கு அமித், விகாஸ் பெயர்கள் பரிந்துரை + "||" + Amit, Vikas names nominated for Kelratna Award

கேல்ரத்னா விருதுக்கு அமித், விகாஸ் பெயர்கள் பரிந்துரை

கேல்ரத்னா விருதுக்கு அமித், விகாஸ் பெயர்கள் பரிந்துரை
கேல்ரத்னா விருதுக்கு அமித், விகாஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல்ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்மந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களான அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களை கேல்ரத்னா விருதுக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரை செய்து இருக்கிறது. அமித் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். விகாஸ் கிருஷ்ணன் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார். இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், சிம்ரன்ஜித் கவுர், வீரர் மனிஷ் கவுசிக் ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கின்றனர். விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.