பிற விளையாட்டு

விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி + "||" + Badminton player Prannoy is dissatisfied with the award

விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி

விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி
விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தியடைந்துள்ளார்.
ஐதராபாத், 

இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, சமீர் வர்மா ஆகியோரது பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் எச்.எஸ்.பிரனாய் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த ஆண்டு தனது பெயர் தேசிய விருதுக்கான பரிந்துரையில் புறக்கணிக்கப்பட்ட போது எதிர்ப்பு குரல் கொடுத்த பிரனாய் மறுபடியும் கடுமையாக சாடியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அர்ஜூனா விருது விஷயத்தில் பழைய கதையே அரங்கேறி இருக்கிறது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவரின் பெயர் (பிரனாய்) பரிந்துரை கூட செய்யப்படவில்லை. அதே சமயம் மேற்கண்ட பெரிய போட்டிகளில் எந்த பதக்கமும் வெல்லாதவரின் (சமீர் வர்மா) பெயர் விருதுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சபாஷ்....கைகுலுக்கி பாராட்டலாம்....நாட்டில் இது ஒரு நல்ல நகைச்சுவை’ என்று கூறியுள்ளார்.