டோக்கியோவில் அடுத்த ஆண்டில் நடக்காவிட்டால் அதன் பிறகு அங்கு ஒலிம்பிக் நடக்க வாய்ப்பில்லை - ஒலிம்பிக் போட்டிக்கான மூத்த அதிகாரி


டோக்கியோவில் அடுத்த ஆண்டில் நடக்காவிட்டால் அதன் பிறகு அங்கு ஒலிம்பிக் நடக்க வாய்ப்பில்லை - ஒலிம்பிக் போட்டிக்கான மூத்த அதிகாரி
x
தினத்தந்தி 6 Jun 2020 11:51 PM GMT (Updated: 6 Jun 2020 11:51 PM GMT)

டோக்கியோவில் 2021-ம் ஆண்டில் நடக்காவிட்டால் அதன் பிறகு அங்கு ஒலிம்பிக் நடக்க வாய்ப்பில்லை என்று ஒலிம்பிக் போட்டிக்கான மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


*‘2021-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடக்க வேண்டும். 2021-ம் ஆண்டில் நடக்காவிட்டால் அதன் பிறகு அங்கு ஒலிம்பிக் நடக்க வாய்ப்பில்லை’ என்று ஒலிம்பிக் போட்டிக்கான மூத்த அதிகாரி பியர் ஆலிவியர் பெக்கர்ஸ் கூறியுள்ளார்.

*பன்டெஸ்லிகா செஸ் போட்டியில் பங்கேற்க ஜெர்மனி சென்றிருந்த இந்திய செஸ் வீரரான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக 3 மாதங்கள் அங்கு சிக்கித் தவித்தார். பின்னர் ஒரு வழியாக கடந்த 30-ந்தேதி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அங்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையின்படி ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுத்த ஆனந்த், நேற்று சென்னைக்கு திரும்பினார். குடும்பத்தினர் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இங்கு வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

*இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவுக்கு நேற்று 32-வது வயது பிறந்தது. இதையொட்டி அவருக்கு சக வீரர்கள் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, முன்னாள் வீரர்கள் தெண்டுல்கர், யுவராஜ்சிங், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் சமூக வலைதளம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

*தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவிடம், முன்னாள் பேட்ஸ்மேன்களில் உங்களுக்கு யாருக்கு எல்லாம் பந்து வீச ஆசை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), தெண்டுல்கர் (இந்தியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு பந்து வீச வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்’ என்று பதில் அளித்தார். மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது, ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் விளையாடுவது என்பது வினோதமாக இருக்கப்போகிறது என்றும் ரபடா கூறினார்.

*டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது எந்த வீரருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்துக் கொண்டிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story