பிற விளையாட்டு

அயர்லாந்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஓய்வு பெற முடிவு + "||" + The Irish boxer decided to retire

அயர்லாந்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஓய்வு பெற முடிவு

அயர்லாந்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஓய்வு பெற முடிவு
அயர்லாந்தை சேர்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக நேற்று அறிவித்தார்.
*‘இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட வேண்டும். அவர் அணியில் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

*பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் சவுரவ் கங்குலி அற்புதமான ஒரு கிரிக்கெட் வீரர். நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு பொருத்தமான நபர். அவர் ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எனது வாழ்நாள் தடையை (சூதாட்டத்தில் சிக்கியதால் நடவடிக்கை) குறைப்பதற்கு அவரிடம் முறையிடுவேன். முடிந்த அளவுக்கு அவர் நிச்சயம் உதவுவார்’ என்றார்.

*அயர்லாந்தை சேர்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரர் 31 வயதான கனோர் மெக்கிரிகோர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக நேற்று அறிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் வெளியிட்ட 3-வது ஓய்வு அறிவிப்பு இதுவாகும்.