பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம் + "||" + Change in Commonwealth Games Date

காமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம்

காமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம்
2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
லண்டன்,

2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு நாள் தாமதமாக 2022-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தினால் 2021-ம் ஆண்டு நடக்க இருந்த சர்வதேச அளவிலான முக்கியமான போட்டிகள் 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அமெரிக்காவில் நடக்கிறது. காமன்வெல்த் போட்டி தேதியில் செய்யப்பட்ட மாற்றம், தடகள வீரர், வீராங்கனைகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு கூடுதலாக ஒரு நாள் கிடைக்கும். இதே போல் பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியின் அரைஇறுதி ஆட்டங்கள் அதே ஆண்டில் ஜூலை 27-ந்தேதி நடக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.