பார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர், ஜப்பான் சுற்று போட்டிகள் ரத்து


பார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர், ஜப்பான் சுற்று போட்டிகள் ரத்து
x
தினத்தந்தி 12 Jun 2020 10:00 PM GMT (Updated: 12 Jun 2020 7:57 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆஸ்திரியா கிராண்ட்பிரியுடன் தொடங்குகிறது.

சிங்கப்பூர்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆஸ்திரியா கிராண்ட்பிரியுடன் தொடங்குகிறது. ஐரோப்பிய கண்டத்தில் 8 சுற்று பந்தயங்கள் நடத்தப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கப்பூர், அஜர்பைஜான், ஜப்பான் ஆகிய நாட்டில் நடக்க இருந்த பார்முலா1 சுற்று பந்தயங்கள் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். சிங்கப்பூர், அஜர்பைஜானின் பந்தயத்திற்கான ஓடுதளம் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் ஆகும். இப்போதைய சூழலில் அந்த ரோடுகளை போட்டிக்காக முழுவீச்சில் தயார்படுத்துவது கடினம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜப்பானுக்கு செல்வதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் மேலும் சில சுற்று பந்தயங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story