பார்முலா1 கார்பந்தயத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தடை


பார்முலா1 கார்பந்தயத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தடை
x
தினத்தந்தி 13 Jun 2020 10:30 PM GMT (Updated: 13 Jun 2020 10:13 PM GMT)

பார்முலா1 கார்பந்தயத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்து நிர்வாக இயக்குனர் ரோஸ் பிரான் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி ஆஸ்திரியா கிராண்டபிரியுடன் தொடங்குகிறது. வழக்கமாக பந்தயம் முடிந்ததும் டாப்-3 வீரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பரிசுக்கோப்பை வழங்கப்படும். அவர்கள் சாம்பெய்னை குடித்தும், ஒருவருக்கொருவர் ஊற்றியும் உற்சாகத்தை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த சீசனில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடத்தப்படாது என்றும், இது பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதி என்றும் பார்முலா1 கார்பந்தயத்தின் நிர்வாக இயக்குனர் ரோஸ் பிரான் தெரிவித்துள்ளார். ஆனால் வேறு ஏதாவது வழியில் வெற்றியாளரை கவுரவிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

Next Story