பிற விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை + "||" + Badminton: Srikanth recommended for Khel Ratna after apologising for leaving Asian c’ships midway

கேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை

கேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை
கேல் ரத்னா விருதுக்கு பிரபல பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு தேசிய பேட்மிண்டன் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிலிப்பைன்சில் நடந்த ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியின் போது அரையிறுதிக்கு முன்பாக ஸ்ரீகாந்த் திடீரென கிளம்பியதால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரது பெயர் முதலில் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. 

பிறகு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் இது போன்று நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்ததால் இப்போது அவரது பெயர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் விருது விவகாரத்தில் பேட்மிண்டன் சம்மேளனத்தை வெளிப்படையாக விமர்சித்த மற்றொரு வீரர் பிரனாய்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பேட்மிண்டனில் 2 முறைஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் ஓய்வு
பேட்மிண்டனில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் ஒன்று ஓய்வு பெற்றார்.