தமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும்’ பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் உறுதி


தமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும்’ பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் உறுதி
x
தினத்தந்தி 22 Jun 2020 9:45 PM GMT (Updated: 22 Jun 2020 9:45 PM GMT)

தமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகார் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் கூறுகையில் ‘தமிழகத்தில் அதிக அளவில் இளம் கைப்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்லூரி மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான லீக் கைப்பந்து போட்டியை கடந்த மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தோம். இதற்காக 70 வீரர்களும் மாநில போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் போட்டி தொடங்குவதற்கான பணிகளை நிறைவு செய்வதற்குள் கொரோனா வைரஸ் தொற்றால் ஊடரங்கு வந்து விட்டது.

 இதனால் இந்த போட்டி நடத்தும் முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியதும் இந்த லீக் போட்டியை நடத்த முயற்சிகள் எடுக்கப்படும். அதேநேரத்தில் சீனியர் வீரர்களுக்கான லீக் கைப்பந்து போட்டி நடத்துவது பற்றி விடுக்கப்பட்டு இருக்கும் வேண்டுகோள் குறித்தும் பரிசீலனை செய்யப்படும். 

கொரோனாவினால் பொருளாதாரா ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் கைப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு கைப்பந்து சங்கம் முடிவு செய்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Next Story