ஐதராபாத்தில் இந்திய பேட்மிண்டன் பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடக்கம்


ஐதராபாத்தில் இந்திய பேட்மிண்டன் பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2020 10:47 PM GMT (Updated: 26 Jun 2020 10:47 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்திய வீரர், வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். கடந்த மாதம் இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் பயிற்சிகள் மீண்டும் தொடங்கின. இதே போல் பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமியில் குறிப்பிட்ட சில வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயம் இந்த மாதம் இறுதி வரை தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஐதராபாத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் பயிற்சி முகாமை ஐதராபாத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் அஜய் சிங்ஹானியா, உள்ளூர் போட்டிகளை வருகிற செப்டம்பர் மாதம் வரை தொடங்குவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Next Story