பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் வெற்றி ஹாமில்டன் ஏமாற்றம் + "||" + Formula 1 2020: Mercedes' Valtteri Bottas wins season-opening Austrian GP, Lewis Hamilton finishes fourth

பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் வெற்றி ஹாமில்டன் ஏமாற்றம்

பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் வெற்றி ஹாமில்டன் ஏமாற்றம்
கொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஒரு வழியாக நேற்று தொடங்கியது.
ஸ்பில்பேர்க்,

கொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஒரு வழியாக நேற்று தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் அரங்கேறிய இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீட்டர் இலக்கை 1 மணி 30 நிமிடம் 55.739 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 2.7 வினாடி மட்டுமே பின்தங்கிய பெராரி அணியைச் சேர்ந்த சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ) 2-வதாகவும், லான்டோ நோரிஸ் (இங்கிலாந்து) 3-வதாகவும் வந்தனர்.


எதிர்பார்க்கப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது கார் ரெட்புல் அணி வீரர் அலெக்ஸ் அல்பானின் கார் மீது மோதியதால் 5 வினாடி பெனால்டி விதிக்கப்பட்டது. இதனால் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளார். அடுத்த சற்று போட்டியும் இதே இடத்தில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பார்முலா1 கார்பந்தயம்: ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹாமில்டன்
பார்முலா1 கார்பந்தயம்: ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹாமில்டன்
2. பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி
பார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.