பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயத்தின் 2-வது சுற்று இன்று நடக்கிறது + "||" + The 2nd round of the Formula 1 car race takes place today

பார்முலா1 கார் பந்தயத்தின் 2-வது சுற்று இன்று நடக்கிறது

பார்முலா1 கார் பந்தயத்தின் 2-வது சுற்று இன்று நடக்கிறது
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
ஸ்பில்பேர்க்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஸ்பில்பேர்க்கில் நடந்த முதலாவது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


இந்த நிலையில் 2-வது சுற்று பந்தயம் ஸ்டிரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் ஸ்பில்பேர்க் ஓடுதளத்திலேயே இன்று அரங்கேறுகிறது. கொரோனா அச்சத்தால் சில நாடுகளில் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனதால் பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் இரண்டு பந்தயம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதலாவது சுற்றில் கோட்டை விட்ட ஹாமில்டன் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் உள்ளார். மழை பாதிப்புக்கு இடையே நேற்று நடந்த தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார். இதனால் இன்றைய பந்தயத்தில் அவரது கார் முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது.