பார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டனின் ஆதிக்கம் தொடருமா? இன்று 3-வது சுற்று நடக்கிறது


பார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டனின் ஆதிக்கம் தொடருமா? இன்று 3-வது சுற்று நடக்கிறது
x
தினத்தந்தி 18 July 2020 9:00 PM GMT (Updated: 18 July 2020 8:10 PM GMT)

கொரோனா அபாயத்தால் சில சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

மொக்யோராட்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்தது. கொரோனா அபாயத்தால் சில சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு வழியாக இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி ரசிகர்கள் இன்றி ஆஸ்திரியா கிராண்ட்பிரி மூலம் தொடங்கியது. இதுவரை 10 சுற்று பந்தயம் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றில் 2 சுற்று முடிந்து விட்டது.

இந்த நிலையில் 3-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மொக்யோராட் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 306.63 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிபாய்வார்கள். முதலாவது சுற்றில் வால்டெரி போட்டாசும் (பின்லாந்து), 2-வது சுற்றில் 6 முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டனும் (இங்கிலாந்து) வெற்றி கண்டனர். இன்றைய பந்தயத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

நேற்று நடந்த தகுதி சுற்றில் ஹாமில்டன் 90-வது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதனால் இன்றைய போட்டியில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story