பிற விளையாட்டு

உலக மகளிர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி தோல்வி + "||" + Indian player Koneru Hampi loses in the final of the World Women's Quick Chess Championship

உலக மகளிர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி தோல்வி

உலக மகளிர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி தோல்வி
உலக மகளிர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனிக்கிடம் தோல்வியை தழுவினார்.
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே உலக மகளிர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.


இந்த போட்டித்தொடரில் இந்தியாவின் கோனேரு ஹம்பி உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த செஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வியை தழுவிய கோனேரு ஹம்பி அடுத்தடுத்த சுற்றுக்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்தார். இதனை தொடர்ந்து 3வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஈரானின் சரசாதத் கதெமல்ஷரிவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3ம் இடம் பிடித்ததோடு இறுதிப் போட்டிக்கும் முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோனேரு ஹம்பியும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனிக்கும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் 5-7 என்ற கணக்கில் ரஷ்ய வீராங்கணையிடம் கோனேரு ஹம்பி போராடி தோல்வியை தழுவினார். இன்று வெற்றி பெற்றுள்ள அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனிக் வரும் திங்கள்கிழமை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை அன்னா உஷேநினா உடன் விளையாட இருக்கிறார்.