பிற விளையாட்டு

விளையாட்டு துளிகள்....... + "||" + sports drops

விளையாட்டு துளிகள்.......

விளையாட்டு துளிகள்.......
விளையாட்டு துளிகள்.......
* தென்ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் குயின்டான் டி காக் அளித்த ஒரு பேட்டியில், ‘அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்காக டிவில்லியர்ஸ் மீண்டும் விளையாட கிட்டத்தட்ட தயாராக இருந்தார். அவர் உடல்தகுதியுடன் இருந்தால் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ஆனால் இப்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போய்விட்டதால் இனி அது எப்போது நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்’ என்றார். அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.


* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடுபவருமான கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது எப்போதும் எனக்கு பிடிக்கும். அதில் ஆடுவது வியப்புக்குரிய அனுபவமாகும். ஆனால் இன்னும் நிறைய தகவல்கள் நமக்கு வர வேண்டி உள்ளது. அதன் பிறகே இறுதி முடிவை எடுக்க முடியும். எந்த போட்டியாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம்’ என்றார்.

* கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாமல் போகக் கூடும் என்று போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது. ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக அங்கு இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.