பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய தடகள அணியின் பதக்கம் தங்கமாக உயர்வு + "||" + Indian athlete's medal rises to gold

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய தடகள அணியின் பதக்கம் தங்கமாக உயர்வு

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய தடகள அணியின் பதக்கம் தங்கமாக உயர்வு
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற இந்திய தடகள அணியின் பதக்கம் தங்கமாக உயர்த்தப்பட்டது.
புதுடெல்லி,

2018-ம் ஆண்டு இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பக்ரைன் அணியில் இடம் பெற்று இருந்த வீராங்கனையான கெமி அடிகோயா ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தங்கப்பதக்கம் கைப்பற்றிய பக்ரைன் அணி தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்றதாக தரம் உயர்த்தி உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய கெமி அடிகோயா பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வென்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை அனு ராகவனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.