பிற விளையாட்டு

4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி 2021-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நடைபெறும் + "||" + Haryana to host 2021 Khelo India Youth Games after Tokyo Olympics

4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி 2021-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நடைபெறும்

4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி 2021-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நடைபெறும்
4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் 2021-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தனது சகோதரர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது.

* 2018-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற பக்ரைன் அணி ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணியின் பதக்கம் தங்கமாக தரம் உயர்த்தப்பட்டது. இது குறித்து இந்த இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீராங்கனை ஹிமா தாஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘மக்களின் பாதுகாப்புக்காக சுயநலமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், போலீசார் உள்ளிட்ட போராளிகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட இந்த தங்கப்பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், ‘4-5 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் போது உடனடியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் மிகவும் கடினமானதாகும். நாங்கள் எங்களுடைய உடல் தகுதியை நன்றாக வைத்து இருக்கிறோம். நாங்கள் கூட்டாக பயிற்சியை தொடங்க அனுமதிக்கப்பட்டால், அதில் இருந்து 20 முதல் 25 நாட்களுக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவோம். ஊரடங்கு சமயத்தில் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி சமையல் செய்யவும், மோட்டார் சைக்கிள் (புல்லட்) ஓட்டவும் கற்றுக்கொண்டேன்’ என்றார்.

* 4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் 2021-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.