பிற விளையாட்டு

உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல் + "||" + Indian women's squad withdraws from World Squash Championship

உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்

உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்
உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியுள்ளது.
சென்னை,

பெண்களுக்கான உலக அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகி இருக்கிறது. இது குறித்து இந்திய ஸ்குவாஷ் சம்மேளன பொதுச்செயலாளர் சைரஸ் போஞ்சா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘தற்போதைய சூழலில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து இன்னும் வரவில்லை. இந்த போட்டிக்கு வீராங்கனைகள் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. இதனால் முன்னணி வீராங்கனைகளிடம் கலந்து ஆலோசித்து உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவது என்று இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் முடிவு எடுத்தது. கொரோனாவின் தாக்கம் குறைந்ததும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து ஸ்குவாஷ் போட்டியை மீண்டும் தொடங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலி மராட்டிய பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகல்
தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலியாக பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் இன்று தேசியவாத காங்கிரசில் சேருகிறார்.
2. காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகல்
காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகி உள்ளனர்.
3. பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.
4. சினிமாவை விட்டு விலகல்: சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன? - தவிப்பில் தயாரிப்பாளர்கள்
சினிமாவை விட்டு விலகும் முடிவால், சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.