தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: எளிதான பிரிவில் இந்திய அணிகள்


தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: எளிதான பிரிவில் இந்திய அணிகள்
x
தினத்தந்தி 3 Aug 2020 11:07 PM GMT (Updated: 3 Aug 2020 11:07 PM GMT)

தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் எளிதான பிரிவில் இந்திய அணிகள் இடம் பிடித்துள்ளன.

புதுடெல்லி,

கொரோனா கோரதாண்டவம் காரணமாக 2 முறை தள்ளிவைக்கப்பட்ட தாமஸ் (ஆண்களுக்கான) மற்றும் உபேர் (பெண்களுக்கான ) கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன.

இதில் இந்திய ஆண்கள் அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு சாம்பியன் டென்மார்க், ஜெர்மனி, அல்ஜீரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். தரநிலையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேஷியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 
இந்திய பெண்கள் அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. பெண்கள் பிரிவில் தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள ஜப்பான் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். கடந்த முறை (2018) நடந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி லீக் சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story