பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் + "||" + INOX Group to sponsor Indian team for Tokyo Olympics: IOA

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ள இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 16 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

* ஜெர்மனி பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதன் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஜெர்மனி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 191 ரன்கள் குவித்தது. பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடிக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜானெட் ரொனால்டு 105 ரன்னும், கிறிஸ்டினா காக் 66 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரியா அணி 53 ரன்களில் சுருண்டு 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.
3. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? - கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.