தேசிய பெண்கள் மல்யுத்த பயிற்சி முகாம் தள்ளிவைப்பு


தேசிய பெண்கள் மல்யுத்த பயிற்சி முகாம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 23 Aug 2020 12:22 AM GMT (Updated: 23 Aug 2020 12:22 AM GMT)

தேசிய பெண்கள் மல்யுத்த பயிற்சி முகாம் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கான தேசிய பெண்கள் மல்யுத்த பயிற்சி முகாம் உத்தபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி தொடங்கி நடக்க இருந்தது. இந்த முகாமில் முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், திவ்யா காக்ரன் உள்பட 15 பேர் பங்கேற்க இருந்தனர். கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாது என்று வினேஷ் போகத் உள்ளிட்ட சில வீராங்கனைகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தேசிய பெண்கள் மல்யுத்த பயிற்சி முகாம் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முகாம் தள்ளிவைக்கப்படுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் தொடங்க முடிவு செய்து கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. ஆனால் ஆண்களுக்கான தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் அரியானா மாநிலம் சோனிபட்டில் திட்டமிட்டபடி வருகிற 1-ந் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story