ஸ்டேடியங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? - மத்திய மந்திரி பதில்


ஸ்டேடியங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? - மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 5 Sep 2020 12:16 AM GMT (Updated: 5 Sep 2020 12:16 AM GMT)

ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கால்பந்து பயிற்சிக்கு உதவும் செயலி ஒன்றின் தொடக்க நிகழ்ச்சியில் ஆன்-லைன் மூலம் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘விளையாட்டு ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அடுத்த ஓரிரு மாதங்களில் நிலைமை (கொரோனா பாதிப்பு) எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஸ்டேடியங்களில் கூடிய சீக்கிரம் ரசிகர்களை பார்க்க விரும்புகிறேன். அது நடக்கும் என்று நம்புகிறோம். ஆனால் பொதுமக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் எப்போதும் எங்களுக்கு முக்கியம்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குள் பதக்கப்பட்டியலில் இந்தியா டாப்-10 இடத்திற்குள் முன்னேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இலக்கை நிர்ணயிக்காமல் அதை அடைய முடியாது. பிரதமர் மோடி, ஒலிம்பிக் ஆயத்த அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

Next Story