பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப்புக்காக ஆடும் பிரேசில் வீரர் நெய்மார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
* பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உடல் தகுதியை பொறுத்தமட்டில் தற்போது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பான நிலையில் உள்ளனர். பயிற்சியின் தொடக்கம் முதலே நானும் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். நீண்ட நாளுக்கு பிறகு பயிற்சி மேற்கொள்வதால் அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டு யாருக்கும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். முதலில் சற்று கடினமாக இருந்தாலும் பயிற்சிக்கு பிறகு வீரர்கள் சரியான நிலையை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய போட்டி தொடருக்கான இந்திய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது சிறப்பானதாகும். இந்த போட்டியில் ஆடுவதன் மூலம் வீரர்களின் உடல் தகுதியும், உத்வேகமும் சரியான நிலையை எட்ட வழிவகுக்கும். பெரிய தொடருக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதை சிறப்பானதாக உணருகிறேன்’ என்றார். ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்க ஓபன் டென்னிசில் அரைஇறுதி ஆட்டத்தின் போது இடது கணுக்காலில் காயமடைந்த அமெரிக்க முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ரோமில் நாளை தொடங்கும் இத்தாலி ஓபன் டென்னிசில் இருந்து விலகியுள்ளார்.

* வெஸ்ட்இண்டீசில் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் போட்டியில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர். சி.பி.எல். போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த வெஸ்ட்இண்டீஸ் நட்சத்திர வீரர் பொல்லார்ட் மற்றும் ரூதர்போர்டு ஆகியோர் அபுதாபியில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முகாமில் இணைந்தனர். இதேபோல் வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ துபாயில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் சேர்ந்தார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் இறுதி ஆட்டத்தை எட்டாத ஒரே அணி டெல்லி என்பது நினைவு கூரத்தக்கது.

* பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப்புக்காக ஆடும் பிரேசில் வீரர் நெய்மார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் அதில் இருந்து குணமடைந்து மறுபடியும் பி.எஸ்.ஜி. அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.