பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி


பார்முலா1 கார்பந்தயம்:  ஹாமில்டன் வெற்றி
x
தினத்தந்தி 13 Sep 2020 10:01 PM GMT (Updated: 13 Sep 2020 10:01 PM GMT)

பார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.

துஸ்கேனி,

பார்முலா1 கார்பந்தயத்தின் 9-வது சுற்றான துஸ்கேன் கிராண்ட்பிரி இத்தாலியில் நேற்று நடந்தது. 309.497 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 19 நிமிடம் 35.060 வினாடியில் இலக்கை எட்டி முதலிடத்தை பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் பெற்றார். கார்கள் மோதல், விபத்தால் ஆட்டம் 2 முறை நிறுத்தம், 8 பேர் பாதியில் விலகல் என்று குழப்பம், பரபரப்புக்கு இடையே ஹாமில்டன் இந்த வெற்றியை பெற்றார். பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் 90-வது வெற்றியை பதிவு செய்த அவர் ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை (91 வெற்றி) நெருங்கி விட்டார். ஹாமில்டனை விட 4.88 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்தார்.

17 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 190 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த சுற்று போட்டி வருகிற 27-ந்தேதி ரஷியாவில் நடக்கிறது.

Next Story