துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:05 PM GMT (Updated: 13 Sep 2020 10:05 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு பிறகு அது 7 ஆண்டாக குறைக்கப்பட்டது. இந்த தடை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி 37 வயதான ஸ்ரீசாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘என் மீது இனி எந்த குற்றச்சாட்டும் இல்லை. நான் நேசிக்கும் விளையாட்டில் இனிமேல் பங்கேற்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* துபாயில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தீபக் சாஹர் குணமடைந்து அணியுடன் ஏற்கனவே இணைந்து விட்டார். உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர் என 11 பேரும் தேறி விட்டனர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மட்டும் கூடுதலாக இரண்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே அவர் அணியின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்று பயிற்சியை தொடங்க முடியும். எனவே ஐ.பி.எல். தொடக்ககட்ட ஆட்டங்களில் அவர் விளையாட முடியாது என்று தெரிகிறது.

* டென்மார்க்கில் அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்பட 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் போட்டியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள சாய்னா நேவால், ‘கொரோனா அச்சத்தால் தாமஸ்-உபேர் போட்டியில் இருந்து 7 நாடுகள் (தாய்லாந்து, கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்பட) விலகியுள்ளன. தற்போதைய சூழலில் இந்த போட்டியை நடத்துவது போதிய பாதுகாப்பானதாக இருக்குமா?’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மான்செஸ்டரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 149 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் டாம் கர்ரனும் (37 ரன்), அடில் ரஷித்தும் (35 ரன்) இணைந்து அணியை 200 ரன்களை கடக்க வைத்தனர். அடுத்து 232 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது.

Next Story