பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் வருகிற 26-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
*பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) 0-1 என்ற கோல் கணக்கில் மார்செய்லி அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அந்த அணிக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளில் பி.எஸ்.ஜி. சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இந்த போட்டியின் இஞ்சுரி நேரத்தில் பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் நெய்மார் எதிரணி வீரர் கோன்சாலிஸ்சை திட்டியபடி ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்தார். இதனால் இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து நெய்மார் உள்ளிட்ட 3 வீரர்கள் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதேபோல் எதிரணியில் இரண்டு பேர் சிவப்பு அட்டை பெற்றனர். தன்னை இனவெறியுடன் திட்டியதால் தான் ஆத்திரம் அடைந்ததாக நெய்மார் தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் வருகிற 26-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இதனை நேரில் பார்க்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் அமர வேண்டும். அதனை விடுத்து மற்ற பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

* ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியை போல் அமைதியுடனும், கட்டுக்கோப்புடனும் சிறந்த திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ரன் இலக்கை விரட்டுகையில் அவரை போல் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா அளித்த ஒரு பேட்டியில், ‘பயிற்சியின் போது தலையில் பந்து தாக்கியதால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் விளையாடாத ஸ்டீவன் சுமித் கடைசி ஒருநாள் போட்டிக்கான அணிக்கு திரும்புவார். அவரது வருகை ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல வழிவகுக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.