பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நாளை துபாய் வருகிறார்கள்.
*சர்வதேச கிரிக்கெட் போட்டியை முடித்துக் கொண்டு ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நாளை துபாய் வருகிறார்கள். ஏற்கனவே கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் தங்களுக்குரிய தனிமைப்படுத்தும் நாட்களை 6-ல் இருந்து 3 ஆக குறைக்க வேண்டும் என்று அவ்விரு நாட்டு வீரர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முதல் போட்டியில் இருந்தே விளையாட முடியும்.

* மராட்டியத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சதாஷிவ் ராவ்ஜி பட்டீல் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இந்திய அணிக்காக 1955-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் விளையாடிய ஆல்-ரவுண்டரான ராவ்ஜி பட்டீலுக்கு அதன் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் மராட்டிய அணிக்காக 36 ஆட்டங்களில் விளையாடி 866 ரன்களும், 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

*தேசிய பயிற்சி முகாமில் இணையும் முன் வீரர், வீராங்கனைகள் தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.