பிற விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்; ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டி + "||" + I look forward to meeting the Chennai Super Kings; Hyderabad team player Vijay Shankar

சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்; ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டி

சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்; ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டி
சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த 29 வயதான விஜய் சங்கர் அளித்த ஒரு பேட்டி:-

கேள்வி: 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்-ல் எந்த அணியை சந்திக்க நீங்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கிறீர்கள்?

பதில்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏனெனில் நான் சென்னையைச் சேர்ந்தவன். அது மட்டுமின்றி சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் போது எப்போதும் மகிழ்ச்சியான உணர்வை தரும்.

கேள்வி: உங்களது அணியின் மிகப்பெரிய பலம் என்ன?

பதில்: எப்போதுமே எங்கள் அணியின் பலம் பந்து வீச்சு மற்றும் டாப் வரிசை பேட்டிங் தான்.

கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் உங்களது தனிப்பட்ட லட்சியம் என்ன?

பதில்: பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் எனக்கு எத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டாலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக முயற்சிக்க வேண்டும். அது தான் இலக்கு.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் எந்த சாதனையை உடைக்க விரும்புகிறீர்கள்.

பதில்: உங்களுக்கு தெரியுமா? ஏற்கனவே ஐ.பி.எல்.-ல் ஒரு சாதனை என் வசம் உள்ளது. ஐ.பி.எல்.-ல் 29 இன்னிங்சில் டக்-அவுட் இன்றி விளையாடி இருக்கிறேன். இது டக்-அவுட் இன்றி அதிக இன்னிங்சை விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையாகும்.

கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது சிறந்த ஆட்டம் எது?

பதில்: 2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் எடுத்த 63 ரன்கள். எனது ஐ.பி.எல். வாழ்க்கையில் முக்கியமான இன்னிங்ஸ் அது.  இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி அக்டோபர் 2 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னை அணியுடன் மோத உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோலியை சந்திக்கும் ஆவலில் உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர்
இந்திய கேப்டன் கோலியை சந்திக்க உயிர் பாதுகாப்பு வளைய விதியை மீறிய ரசிகர் பின்னர் கோலி கூறியதற்கேற்ப திரும்பி சென்றார்.