பிற விளையாட்டு

டென்மார்க் பேட்மிண்டன்: சிந்து விலகல் + "||" + Denmark Badminton: Indus Deviation

டென்மார்க் பேட்மிண்டன்: சிந்து விலகல்

டென்மார்க் பேட்மிண்டன்: சிந்து விலகல்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
ஐதராபாத்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டியில் தங்களது சொந்த பொறுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் பெயரை தெரிவிக்கலாம் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி இருக்கிறார். அதேநேரத்தில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய ஓபன் போட்டியில் பங்கேற்க சிந்து திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த், காஷ்யப், சாய்னா நேவால் உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் டென்மார்க் ஓபனில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.