பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
* சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா (291 புள்ளி), இங்கிலாந்து (280 புள்ளி) அணிகள் முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றன. இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி (270 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி (269 புள்ளி) 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. இந்தியா (121 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (119 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன.

* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கோர்ட்னி வால்ஷ் அந்த நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 57 வயதான வால்ஷ் 2022-ம் ஆண்டு இறுதி வரை இந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அமீரகத்துக்கு சென்ற பிறகு கடைசி நேரத்தில் சொந்த பிரச்சினை காரணமாக நாடு திரும்பினார். இதேபோல் தனிப்பட்ட காரணத்தால் சுழற்பந்து பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அமீரகம் செல்லவில்லை. இருவரும் இந்த சீசனுக்கான போட்டி தொடரில் இருந்து முழுமையாக விலகினார்கள். கடந்த 2018-ம் ஆண்டில் சுரேஷ் ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஹர்பஜன்சிங் ரூ.2 கோடிக்கும் 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவரது ஒப்பந்தத்தையும் நீட்டிக்காமல் முறித்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.