பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
29 வயதான நஜீபுல்லா ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.
* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்க்க கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்துக்கு சென்றார். இதனால் அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் முதல் கட்ட போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டு இருக்கிறார். அவர் இன்று துபாய் வந்தடைகிறார். 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் மூன்று முறை கொரோனா பரிசோதனை முடிவுக்கு பிறகு அவர் அணியினருடன் இணைவார்.

*ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீபுல்லா தரகாய் அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்க ரோட்டை கடந்த போது கார் மோதி படுகாயமடைந்தார். ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 29 வயதான நஜீபுல்லா ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.

* ஆஸ்திரேலியா - நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 180 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 33.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மெக் லானிங் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

* மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘தொடக்கத்தில் இந்த மாதத்தில் (அக்டோபர்) விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து விடலாம் என்று நான் நினைத்தேன். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அது நடக்கவில்லை. கொரோனா தடுப்பூசி விரைவில் வந்து விடும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நம்மால் விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த முடியும் என்று நினைக்கிறேன்’ என்றார்.