பிற விளையாட்டு

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கொரோனாவால் பாதிப்பு + "||" + Boxer Lovlina Borgohain tests positive for coronavirus, misses flight to Italy

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கொரோனாவால் பாதிப்பு

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கொரோனாவால் பாதிப்பு
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் 16 இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகளில் 52 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதற்கான இந்திய அணியினர் நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக குத்துச்சண்டை அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உலக சாம்பியன்ஷிப்போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பவருமான அசாம் மாநிலத்தை சேர்ந்த 23 வயது வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதனையத்து அவர் இத்தாலி செல்லவில்லை. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.