பிற விளையாட்டு

இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்- 31-ந் தேதி நடக்கிறது + "||" + Election of Indian Athletics Federation Administrators

இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்- 31-ந் தேதி நடக்கிறது

இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்- 31-ந் தேதி நடக்கிறது
நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் 21-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் ஆன்லைனில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த தேர்தலை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. 

இதில் முதல் நாளில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் 21-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அடில் சமரிவாலா 3-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலாளர் சி.கே.வல்சனின் பதவி காலம் முடிவடைவதால் புதிய செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
3. கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
4. மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- உலக அரங்கில் அதிர்ச்சி
சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.